Saturday 3 March 2018

கூத்து மீளுருவாக்கம்

கூத்து மீளுருவாக்கம்-1

கூத்து மீளுருவாக்கம் என்றால் என்ன அது ஒரு கோட்பாடா செயல் முறையா தமிழில் அது எப்போதிருந்து பேசப்படுகிறது.ஈழத்தில் இந்த சொல்லாடலின் தொடக்கப் புள்ளியிலிருந்து இன்று வரை ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் என்ன.இதன் இயங்கு தளம் ஒற்றை தன்மைத்துடையதா.அல்லது ஒற்றைப் பரிமாணம் கொண்டதா.

மரபுக் கலைகளின் மீளுருவாக்கம் உலகம் முழுவதும் நடந்தேறியுள்ளன அவரவர் பண்பாட்டு கலாசார தளங்களில் தாக்குறு கருத்தியலாகவே இருந்துள்ளது.

நவீன கலை வரலாறு நமக்கு பல மீள் கண்டு பிடிப்புக்களை தந்துள்ளது கிரேக்க அரங்கிலிருந்து நாம் இதனை கண்டு கொள்ள முடியும்.

மரபுகளை மீளக் கண்டு பிடித்தலும் மீளுருவாக்க செல் நெறிகளும் காலந்தோறும் நடந்தேறி வந்துள்ளன.

மீளுருவாக்க செயல் முறைகளை நாம் இப்படி வகுத்துக் கொள்ளலாம்.

1.அருகிப் போய் இருக்கும் அருங் கலைகளை கண்டு பிடித்தலும் அவற்றின் வாழ் நிலையயை உறுதிப் படுத்தலும்.

2.பயில் நிலையில் இருக்கும் பழங் கலைகளை அவற்றின் தொடர் நிலையினை செயலூக்கம் மிக்கதாய் மாற்றுதல்.

3,தொல் சீர் கலைகளாய் இருந்தவை அவற்றின் தொல் சீர் மரபை இழந்த நிலையில் மீண்டும் அவற்றை முன்னைய அழகியல் கூறுகளை கண்டு பிடித்தலும் அவற்றை மீளமைத்தலும்.

4.இப்போ பயில் நிலையில் இருக்கும் கலைகள் அவற்றின் வாழ் நிலையில் பெர்ற மார்றங்கள் எவை அந்த மாற்றங்களை அவை எப்படி உள்வாங்கிக் கொண்டன .

5.இன்றைய சம காலச் சூழலில் மரபுக் கலைகளை அவற்றில் புதிய மாற்றங்களை நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப அறிமுகப் படுத்தலும் புதிய எல்லைகளை தொடுதலும்.

6.நவீன மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு புதிய பார்வையாளர்களை நோக்கி நகருதல்.

7.மரபுக் கலைகளிலிருந்து புதிய வடிவங்களை உருவாக்குதல்

8.நவீன கலை வடிவங்களில் மரபுக் கலைகளை உள் வாங்குவதும் அவற்றின் கூறுகளை பயன் படுத்தலும்.
2.
கூத்து மீளுருவாக்கம்-2

அரங்கு அதன் தொடக்கம் மீளச் செய்தல் மீள் உருவாக்க முயற்சிகளிலேயே பல்லாயிரம் வருசமாய் தன்னை தகவமைத்துக் கொண்டு வந்துள்ள வரலாறு.

போலச் செய்தலே அரங்கின் தொடக்கம். போலச் செய்தல் மீளச் செய்தல் மீளுருவாக்கம் என சடங்கு கலைகள் அதன் தொடர்ச்சி அமைகிறது.

சடங்குகள் என்பனவும் அரங்கின் தொடக்கமாக கொள்ளப் படுகிற வேட்டையாடுதலும் அவற்றை மீளச் செய்தலும் அவனைப் போல அவளைப் போல அவற்றைப் போல என போலச் செய்தலின் மீளுருவாக்க செயல் பாடுகளே நமக்கு அரங்க மீட்டுருவாக்க செல் நெறிகளை கற்றுத் தந்தன.

ஆதி மனித நாகரிகம் வேட்டையாடுதலையும் அதன் வழி தங்கள் இருப்பையும் நிலை நிறுத்தும் போது போலச் செய்தல் என்பது சமூக கூட்டத்தின் கல்வியாகவும் கொண்டாட்டமாகவும் ஒரே நேரத்தில் இயங்குகின்ற தொடர்ச்சியயை நாம் இன்று வரை அரங்கில் காண்கிறோம்.

தனி மனிதனாகவும் கூட்டமாகவும் வேட்டையாடும் மரபு ஆதிச் சமூகங்களில் இன்று வரை நாம் காணலாம்.தான் எப்படி வேட்டையாடினேன் நாங்கள் எப்படி வேட்டையாடினோம்,என செயல் முறை சார்ந்து விளக்கும் போது அதன் வழி உருவாகும் நடிப்பும் பாவனைகளும் ஒலிகளும் பின்னர் பாடல்களாகவும் உரையாடல்களாகவும் வடிவம் பெற அரங்கு அதன் ஆரம்ப வாழ் நிலையயை தொடர்ந்தது.

வேட்டையாடுதலும் அரங்கின் வழி வந்த சடங்குகளும் அரங்கின் ஆரம்ப நிலையயை வெளிப் படுத்த மீளச் செய்தலும் மீளுருவாக்கமும் தொடர் செயல் பாடுகளாக தொடர்ந்தன

இறப்பு மீட்பு சடங்குகள் அரங்கில் மீட்டும் மீட்டும் செய்யப் பட்டு மீளுருவாக்க செயல் பாடுகளினூடு அரங்க வடிவம் பெற்றன எகிப்திய பழமை அரங்கு இதனை உணர்த்தி நிற்கிறதமிதன் தொடர்ச்சியயையே நாம் பாஸ்கா நாடகங்களில் பார்க்கிறோம் கிறிஸ்துவின் இறப்பும் உயிர்த்தெழுதலும் மீளுருவாக்கம் பெற்று இன்று வரை உலகம் முழுவது உயிர்ப்புள்ள அரங்காக வலம் வருகிறது
3.
கூத்து மீளுருவாக்கம்-3

மீள் உருவாக்கம் என்றால் என்ன அதன் நேரடி பொருள் மீண்டும் உருவாக்குதல் .மீள கட்டமைத்தல் எனும்போது முன்பு இருந்தது இப்போது இல்லை அது கலைந்து கிடக்கிறது அல்லது குழம்பிப் போயுள்ளது காணாமல் போயுள்ளது அப்படி உள்ளவைகளை கண்டு பிடித்தலும் நேர் படுத்தலும் மீளுருவாக்கம் என்ற கருத்தியல் தளத்தை உணர்த்தி நிற்கிறது.

மனித வாழ்வு என்பதும் ஒரு மீள் உருவாக்க சுழர்ச்சியே.

மீள் உருவாக்கம் என்பதை இன்னொரு வகையில் பொருள் கொள்வதானால் கற்பனைக்கும் அதன் தொடர்பில் ஏற்படும் புத்தாக்க சிந்தனைகளும் இருப்பவற்றிலிருந்து இல்லாததை மீள் உருவாக்கமாக முன்னிறுத்துதல்.

அரங்கில் மீள் உருவாக்கம் என்கிற கருத்து நிலை கற்பனைக்கும் கலைப் படைப்பாக்கத்துக்கும் முன் இப்படி இருந்தது அதனை மீட்டு புதிய வாழ் நிலையயை வழங்குகிற ஒரு செயலூக்கம் நிறைந்த கலைச் செயல் பாடாகவே கொள்ள முடியும்.

மீள் உருவாக்கம் இப்படித்தான் அமைய வேண்டும் என யாரும் சட்டம் இயற்றவில்லை யுனஸ்கோவில் காப்புரிமையும் பெறவில்லை ஒரு கலை வடிவம் இயங்கும் சூழல் சமூக பொருளாதார அரசியல் கட்டுமான பின் புலம் அவரவர் கொண்டிருக்கும் கருத்து நிலை என்பவற்றை அடிப்படையாக கொண்டு மீள் உருவாக்கம் என்பது கட்டற்றதாய் சுதந்திர கலைத்துவ சிந்தனைகளினூடு பயணிக்கும் கலைத்துவ செயல் பாடு.கூத்து மீளுருவாக்கத்துக்கும் இது பொருந்தும்.

மீள நினைத்தலும் அந்த மீள நினைவில் விரியும் விம்பங்களின் வழி உருவாகும் காட்சிப் படிமங்கள் கலை வடிவம் காணும் இடங்கள் அது ஓவியம் சிற்பம் இசை நாடகம் என எல்லா வடிவங்கள் வழியாகவும் மீள் உருவாக்க சிந்தனைகளை நம் முன் கொண்டு வரும் .

மீள் உருவாக்க சிந்தனை என்பது யாரும் உரிமை கொண்டாட முடியாத ஒரு செயல் மரபு அதில் காலந்தோறும் பலர் வந்து போவர் அவரவர் வழி பயணிப்பர்
4.
கூத்து மீளுருவாக்கம்-4

சடங்குகளும் மீளுருவாக்கமும்

சடங்குகளின் தோற்றமும் அரங்கின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை .மனித வரலாறு அதன் உருவாக்கம் சடங்குகளின் வழியாகவே பல்லாயிரம் வருடம் பயணித்திருக்கிறது.உலகம் முழுவதும் சடங்குகள் அரங்கின் மூலங்களாக கொள்ளப் படுகின்றன

.உலகின் மிகத் தொன்மையான அரங்க நூலான நாட்டிய சாஸ்த்கிரம் அரங்கின் மூலத்தை புராணத்தோடு தொடர்பு படுத்துகிறது.பாற்கடல் கடைந்ததையும் அமுதம் எடுத்தததையும் முதல் நாடகமாக கற்பிக்கப் படுகிறது.அதன் தொடர்ச்சியாக அதிலிருந்து மீளுருவாக்கம் கொள்கிற வரலாறாக இந்திய அரங்கு கட்டமைக்கப் பட்ட வரலாற்றையும் கோட்பாடுகளையும் முன் வைக்கிறது.

கிரேக்க அரங்கு பல்வேறு சடங்குகளின் மூலத்தை அடிப்படையாக கொண்டாலும் டயோனிசஸ் தெய்வத்துக்கு செய்யப் படுகின்ற வழச் சடங்குகள் மேலைத் தேய அரங்கின் மூலமாக உள் வாங்கப் படும் காட்சிகளை அரங்கியலாளர்கள் முன்னிறுத்துகின்றனர் அந்த சடங்குகளின் மீளுருவாக்க வாழ் நிலையாயையே நாம் சோபோகிளிசிலும்,ஈரிப்பிடிசிலும் பார்க்க முடிகிறது .

நடிகன் சடங்குகளிலிருந்தே உருவாகிஉறன் மீளுருவாக்க பயில் நிலையில் நடிகன் முதன்மைப் படும் சூழ் நிலைகளும் கோரஸ் எனப்படும் பாடல் குழுவினர் மீளுருவாக்க செயல் நிலையில் கிரேக்க அரங்கின் அடுத்த படி நிலையயை வெளிப்படுத்துகின்றன.

தனி ஒரு நடிகனிலிருந்து பல நடிகர்களும் பாடல் குழுவும் அரங்கின் மீளுருவாக்க செல் நெறிகளின் படைப்பாக்க வழி முறைகளாகவே ஆரச்சியாளர்கள் இனம் கண்டுள்ளனர்.

ரோம அரங்கிலும் சடங்குகளும் அதன் மீளுருவாக்க வழி முறைகளும் புதிய பிரமாண்ட அரங்குகளின் உருவாக்கத்துக்கு வழி சமைத்து நிக்கின்றன கிரேக்க அரங்கின் தொடர்ச்சியாக ரோம அரங்கு இருந்தாலும் ரோமில் வீனஸ் தெய்வத்துக்கான சடங்குகள் அரங்கின் மூலத்தையும் அதன் அடுத்த கட்ட ரோமானிய அரங்கின் எழுச்சியயையும் மீளுருவாக்க செயல் பாடகவே நாம் ரோமானிய கொலோரிய அரங்குகளை காண முடியும்
5.
கூத்து மீளுருவாக்கம்-5

பிரித்தானிய பழமை அரங்கும் மீளுருவாக்கமும்

பிரித்தானியாவில் ஆரம்ப கால அரங்காக இனம் காணப் படுபவை மோரிஸ் நடனங்களும் அதனுடன் தொடர்பு பட்ட ரொபின் கூட் கதைகள் முதலான மக்கள் மத்தியில் இருந்த பல் வேறு கதைகள் தெரு வெளி நாடகங்களாக அரங்கிடப் பட்டன.

அடுத்த கட்ட வளர்ச்சியாக இந்த கதை சொல்லும் மரபு மீளுருவாக்க அரங்காக எழுச்சியுறுவதை வரலாற்று மூலங்களின் மூலம் அறிய முடிகிறது.தெரு வெளி அரங்காக அறியப் பட்ட இவை அடுத்த நிலையில் உள்ளக அரங்குகளில் நிகழ்த்தப் படும் அளிக்கைகளாக மீளுருவாக்கம் பெற்றன.கேளிக்கை நிறைந்த இந்த அரங்குகள் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு செலுத்திய போது மத குரு பீடங்கள் இவற்றுக் கெதிராக செயல் பட்டு இவற்றை தடை செய்தன.ஆனாலும் அரங்கு அதன் செயல் திறன் மத குரு பீடங்களையே ஆக்கிரமித்தமை ஒரு முரண் நகைதான்.

மத்திய கால அரங்காக மீளுருவாக்கம் பெற்ற நாடகங்கள் பைபிள் கதைகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் குரு பீடங்கள் தேவாலயங்களுக்குள்ளும் வெளியிலும் நகர மையங்களிலும் சுழலும் அரங்காக செயல் படும் அளவுக்கு மீளுருவாக்கம் பெறும் காட்சிகளை பிரித்தானிய அரங்க வரலாறு உணர்த்தி நிற்கிறது.

6.
கூத்து மீளுருவாக்கம்-6

பிரித்தானிய அரங்க மறுமலர்ச்சி

பிரித்தானியர்கள் தங்கள் தொல்சீர் மரபை தேடிய போது அதன் மூலத்தை கிரேக்க அரங்குகளிலும் ரோம அரங்குகளிலும் கண்டனர்.கிரேக்க ரோம நாடகங்கள் மீள் உருவாக்கம் பெறுகின்ற சூழல் மத்திய காலத்துக்குப் பின்ன்ரான மத குருமாரின் ஆதிக்கத்திலிருந்து அரங்கு விடுபட்டு ஒரு மறுமலர்ச்சி யுகத்தினுள் பிரவேசிக்கிறது.

தங்கள் பழைமையயயும் தொல்சீர் மரபையும் மீட்டெடுத்தல் என்கிறதான கொள்கைகள் அரங்க வெளியில் மீள் உருவாக்கத்துக்கான தேவையயை வெளிப்படுத்தி நிற்கின்றன.

புதிய சூழ் நிலையில் பிரித்தானிய அரங்கின் அழகியல் சார்ந்து கிரேக்க முதுசங்களிலிருந்து உள்வாங்கப் பட்ட தொல்சீர் மரபு சேக்ஸ்பியரில் புதிய பொலிவு பெற்று பிரித்தானிய அரங்குக்கு மகுடம் சூட்டும் மீள் உருவாக்கமாக எலிசபெத்தியன் அரங்கு உருவாகிறது.

சேக்ஸ்பியர் கிரேக்க இன்பியல் துன்பியல் நாடகங்களால் ஈர்க்கப் பட்டு ஆங்கில மரபிற்கான செவ்வியல் நாடக மரபு மீட்டெடுப்பாக தன் நாடகங்களை படைக்கிறார்.ஒருவகையில் மீளுருவாக்க சிந்தனை வயப் பட்டனவாகவே அவை அமைந்தன.

இன்பியல் துன்பியல் புனைவுகளாக அவை இருந்தாலும் தமக்கான ஒரு தொல்சீர் மரபின் ஆங்கில மொழிவழி செம்மை சார் படைப்புகளாக அமைந்தன.தங்கள் கலை பண்பாட்டு மீட்டெடுப்பாகவும் கலாசார மீட்டுருவாக்கமாகவும் சேக்ஸ்பியர் படைப்புகளை பிரித்தானிய சமூகம் கொண்டாடியது.

இன்று சேக்ஸ்பியரது படைப்புகள் பல மீளுருவாக்கம் பெற்றுள்ளன குறிப்பாக அவரது ஒத்தல்லோ,ஹம்லட்,ரோமியோ ஜூலியட்,கிங்லீயர்,மக்பத் ஆகியவை அதிக அளவில் மீளுருவாக்க படைப்புகளாய் புதிய சிந்தனைக் களங்களை திறந்து விட்டுள்ளன

7.
கூத்து மீளுருவாக்கம்-7

மறுமலர்ச்சிக் காலமும் அரங்க கலைகளின் மீளுருவாக்கமும்.(RENAISSANCE THEATRE)

மறுமலர்ச்சி என்பது மறுபிறப்பு மீள் உருவாக்கம் என்று பொருள் கொள்ள முடியும் 16 ஆம் நூற்றாண்டில் அரங்க கலைகளின் ஒவ்வொரு பகுதியிலும் மீளுருவாக்க வளர்ச்சியை நாம் காணலாம், அரங்கில் இது புதிய தத்துவமாக உருவாவதையும் அதன் வழி நாடக எழுத்தாளர்கள் கலைஞர்கள் ,அரங்க கட்டிட வடிவமைப்பாளர்கள் கட்டிடக் கலைஞர்களும் என இணைந்து புதிய காட்சியரங்குகளை வடிவமைக்கின்றனர். பெண்கள் மேடை நிகழ்வுகளில் முக்கிய பங்காளிகளாகின்றனர். இது ஐரோப்பாவெங்கும் பரவுகிறது.

16 ஆம் நூற்றாண்டு வரை இருந்த சமூக பொருளாதார நிலமைகள் மாறுகின்றன
1. நிலப்பிரபுத்துவ சரிவு,
2. நகரங்களின் அதிகரிப்பு,
3. புதிய அதிகார மையங்களின் உருவாக்கம்.
4. கல்வி வாழ்க்கை முறைகளில் மாற்றம்
5.தேவாலயங்களின் செல்வாக்கில் வீழ்ச்சி
5. புதிய கண்டுபிடிப்புகள்
என்பன மறுமலர்ச்சி யுகத்துக்கும் மீளுருவாக்க சிந்தனைகளுக்கு துணை நிற்கின்றன.

கிரேக்க ரோம மரபுகளின் மீளுருவாக்கமாக மூன்று வகையான நாடகங்கள் இத்தாலியில் மறு உருவம் பெறுகின்றன.

1.TRAGEDY இத்தாலிய தனித்துவத்தை வெளிப்படுத்திய துன்பியல் கிரேக்க ரோம மரபுகளின் வழி வந்தவை
2.COMEDY இன்பியல் ரொம கிரேக்க மரபுகளின் இத்தாலிய முகம்
3.PASTORAL காதல் கதைகள் நிறைந்தது இத்தாலிக்கே உரித்தான தனித்துவ மரபு

இந்த அரங்க மறுமலர்ச்சி ஐரோப்பாவெங்கும் அரங்கில் புதிய மீளுருவாக்க சிந்தனைகளுக்கு வழி சமைத்தது

8.
கூத்து மீளுருவாக்கம்-8

மீளுருவாக்க சிந்தனைகளால் நிறைந்திருக்கும் மேலைத்தேய நவீன அரங்கு

16 ஆம் நூற்றண்டுகளில் முனைப்புப் பெற்ற மறுமலர்ச்சி யுகம் 18ம் நூற்றாண்டு வரை செல்வாக்கு மிக்கதாக பல்வேறு குணாம்ச மாற்றங்களுடன் ஐரோப்பிய அரங்க மரபில் செல்வாக்கு செலுத்திய சூ நிலையில் நவீன அரங்க வரலாறு தொடங்குகிறது

நவீன அரங்கு புதிய சிந்தனைகளுக்கும் புத்துருவாக்கங்களுக்கும் களம் அமைக்கும் மீள் உருவாக்க சிந்தனகளுடன் தன் முகம் காட்ட முனைகிற போது அரங்கு பன்மைத்துவத்துவத்தையும் உலகளாவிய உள் வாங்கல்களையும் இணைத்ததான மீளுருவாக்க பயணமாக அமைகிறது.

ஒபேராக்களின் அதி உன்னத உருவாக்கங்களும் இக்காலத்தில் மீளுருவாக்கம் பெறுகின்றமை மேலைத் தேய அரங்கின் அழகியலை அதீதமாக்குகின்ற காண்பியங்களாக அவை அமைந்ததையும் காண முடியும்

9.
கூத்து மீளுருவாக்கம்-9

புதிய சிந்தனைகளும் மீளுருவாக்கம் பெற்ற நவீன அரங்குகளும்

அரங்கில் நவீன சிந்தனைகள் அவான் காட் சிந்தனைகளால் முதன்மை பெற்றாலும் அரங்கின் மீளுருவாக்க நவீன சிந்தனைகளில் கீழைத்தேய அரங்க அளிக்கைகள் சடங்குகள் நம்பிக்கைகள் செல்வாக்கு செலுத்துகின்ற மரபினை காண முடியும்

நவீன அரங்கவியலாளர்களான

1.பெற்றோல் பிரக்ட்
2.மேயர் ஹோல்ட்
3.குரட்டோவஸ்கி
4.ரிச்சட் செக்னர்
5.பீற்றர் புரூக்

இவர்களது படைப்புகள் முன்னைய நவீன மேலைத்தேய அரங்கில் புதிய மாற்றங்களை முன் வைக்கின்றன.

பெற்றோல் பிரக்ட்
நவீன அரங்கில் அன்னியமயமாதல் கோட்பாட்டை முன் வைத்தவர் தன் காவிய பாணி அரங்கின் மூலம் இன்று வரை நவீன அரங்கவியலாளர்களிடம் செல்வாக்கு மிக்க ஆளுமையாக தொடரும் ஒரு மரபின் சொந்தக் காரர்.

இவர் தன் காவியபாணி அரங்கின் உந்து சக்தி ஆசிய அரங்க மரபு என்கிறார்.அன்னியமயமாதல் கோட்பாட்டின் மூலம் கீழைத்தேய அரங்க மரபு என அடையாளமிடுகிறார்.கூத்து அளிக்கையில் நடிகன் அவன் சுதந்திரமான நகர்வுகள் பார்வையாளர்களுடன்அவன் கொள்ளும் உறவு அன்னிய மயமாதல் கோட்பாட்டின் அடிப்படைகளாக உள்ளன.

கூத்தரங்கில் ஆடும் நடிகன் ஆடுகின்ற போது தன்னை அந்த பாத்திரமாக பாவித்து நடிக்கும் நடிகனாகவும் தன்னையே பார்க்கும் ஒருவனாகவும் மாறும் அந்த சூழ் நிலை .ஆடிய அவன் ஆட்டம் முடிந்து தன்னை பார்வையாளனுடன் இணைத்துக் கொண்டு பார்த்தல் இது இந்திய ,கீழை மரபில் சாத்தியமான ஒன்றாய் இருக்க மேலை மரபில் அன்னியமயமாதல் கோட்பாட்டின் மூலம் பிரக்டால் அறிமுகமாகிறது

மேயர் ஹோல்ட்

அரங்க மீளுருவாக்கத்திற்கு புது வடிவம் கொடுத்த ரஸ்ய நாடகவியலாளர்.நடிப்பு என்பது உள்ளிருந்து வருவதல்ல வெளிக் காரணிகளின் தாக்கமென வாதிட்ட கருத்தியலாளன்.

நடிகன் உடலால் பாய்தல் தாவுதல் உருளுதல் அசைதல் என அங்கங்களின் வழி நடிப்பு உருவாகிறது என்ற மரபில் உடற்போறி முறை செயல் பாட்டு அரங்கை உருவாக்கியவர்.வெறும் வார்த்தைகளினாலும் உரையாடல்களினாலும் ஊணர்வு வெளிப் பயணமாய் இருந்த அரங்கில் உடற்பொறி முறையயை அறிமுகப் படுத்தியவர் இந்திய மரபினான மரபு வழி அரங்குகளின் குறிப்பாக கதகழியியால் கவரப் பட்டவர்.

10.
கூத்து மீளுருவாக்கம்-10

நவீன அரங்க மீளுருவாக்கமும் முழுமை அரங்கும் சூழலியல் அரங்கும்

ரிச்சட் செக்னர்

மேற்குலகில் முழுமை அரங்கு,சூழலியல் அரங்கு எனும் கோட்பாட்டை முன் வைத்தவர் அமரிக்க நாடகவியலாளரான ரிச்சட் செக்னர் .இவரது அரங்கு அரங்கின் மீளுருவாக்கமாகவே அமைந்தது.

பழமை கிரேக்க நாடகங்களையும் சேக்ஸ்பியர் நாடகங்களையும் பிரக்டின் நாடகங்களையும் தன் பாணியில் மீளுருவாக்கம் செய்து அரங்கின் எதிர்கால எதிர்வு கூறுதலையும் வைத்து பயணித்தவர்.
இந்தியா ,சீனா ,தென் ஆபிரிக்கா,தென் அமரிக்கா ஆகிய நாடுகளின் அரங்குகளின் தாக்கம் அவரது படைப்புகளில் அவரது மீளுருவாக்க அரங்கில் செல்வாக்கு செலுத்தியமை குறிப்பிடத் தக்கது.

செக்னர் உலகம் தழுவிய அரங்கை காதலித்தார் அவரது அரங்க கோட்பாடு எல்லாவற்றையும் உட் கொண்டதுமான ஒரு அரங்க வெளியயை நம் முன் கொண்டு வந்தது
11.
கூத்து மீளுருவாக்கம்-11

ஒருங்கிணைந்த கலாசார அரங்கு

ரிச்சட் செக்னர் அவர்களது அனைத்தும் உட் கொண்ட அரங்கு சூழலியல் அரங்கு ஆகிய கோட்பாடுகள் மேலைத்தேய அரங்குக்கு புதிய மீளுருவாக்க கோட்பாடுகளை முன் வைத்தது அவர் வழியில் பலர் வண்ணமயமான அரங்கை உருவாக்கினர்.ஆசிய ஆபிரிக்க,ஐரோப்பிய அமரிக்க இணைவில் ஒருங்கிணைந்த கலாசார அரங்கு உருவாகியது.

ஒருங்கிணைந்த கலாசார அரங்கிற்கு மிகச் சிறந்த உதாரணம் ''லயன் கிங்'' அற்புதமாக வடிவமைக்கப் பட்ட அரங்கு .
Patrice Pavis தனது The Intercultural Performance Reader எனும் நூலில் பல கலாசாரங்களின் இணைந்த அரங்கு பற்றியும் லயன் கிங் நாடகம் பற்றியும் சிறப்பாக குறிப்பிடுகிறார் .

பல மேலைத்தேய நவீன அரங்கவியலாளர்கள் பல் கலாசார இணைவில் அரங்கு அதன் முழு அழகைப் பெறும் என்பதை ஏற்றுக் கோன்டவர்களாக செயல் படுவதை காணலாம்.

அரங்கு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல என்பதை நவீன அரங்க செயல் பாடுகள் நிருபிக்கின்றன.

நான் லண்டன் வந்த நாளிலிருந்து லயன் கிங் எனும் நாடகம் ஒரே அரங்கில் கடந்த ப்தினொரு வருசங்களாக நாள் தவறாமல் மண்டபம் நிறைந்த காட்சிகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

உலக அரங்க வரலாற்றில் மீளுருவாக்க அரங்கிற்கு இது ஒரு நல்ல உதாரணம் பைபிளில் வரும் ஜோசப் மோசஸ் கதையயை அடிபடையாக அமைய சேக்ஸ்பியரின் ஹம்லட் கதைப் பின் புலத்திலும் ஆபிரிக்க பாடலின் கதாபாத்திரங்களின் சேர்க்கையிலும் உருவான ஆடல் பாடல் இணைந்த கதை.
12.
கூத்து மீளுருவாக்கம்-12

மீளுருவாக்க நவீன அரங்காக மகாபாரதம்

மேலைத் தேய மரபில் நவீன அரங்கு யதார்த்த வாதம் முதல் பல் வேறு இசங்களின் தாக்கத்துக்கும் பல நவீன அரங்கவியலாளர்களின் புதிய புதிய கருத்தியல் தளங்களிலும் பயணித்து பழைய அரங்க மரபுகள் புத்துருவாக்கம் பெற்றன குறிப்பாக கிரேக்கத்தின் தொன்மை நாடகங்கள் ,ரோம தொல் மரபு நாடகங்கள் ,சேக்ஸ்பியரின் ஆங்கில கவித்துவ அரங்குகள் புது வடிவம் பெற்று புதிய சிந்தனைகளை அரங்க வெளியில் பரப்பிய சூழ் நிலையிலேயே பீற்றர் புறூக் எனும் மகா கலைஞனைமேற்குலகம் சந்திக்கிறது.

மகாபாரதம் எனும் நம் இந்திய மரபுக்கும் ஆசிய மரபுக்கும் உரித்தான காவியக் கதை பீற்றர் புருக்கால் மீளுருவாக்க அரங்காக உருவாகிறது.

ஆசிய மரபுகளும் மேலைத் தேய மரபும் சந்திக்கின்ற ஒரு சிறந்த அரங்க முகமாக மகாபாரதம் வெளிக் கிளம்புகிறது.

ஆசிய,ஆபிரிக்க மேலைத் தேய நடிகர்கள் இதில் பங்கெடுத்தனர்.நம் கூத்து மரபில் விடிய விடிய ஆடக் கூடிய கதையாகவும் பல நாட்கள் தொடர்ந்து ஆடப்படும் கதையாகவும் நாம் அறிவோம் .பீற்றர் புரூக் இதனை ஒன்பது மணி நேர நாடகமாகவும் பின்னர் நான்கு மணி நேர திரைப்படமாகவும் நெறிப்படுத்தியிருந்தார்.

பல தமிழ் கலா விமர்சகர்கள் சேக்ஸ்பியரையும் இப்சனையும் மற்றும் மேலைத் தேய நாடகவியலாளர்களையும் முன் வைத்து தமிழில் நாடகமேயில்லை என அபத்தமான கருத்துக்களை முன் வைத்த காலத்தில் நம் கூத்து மரபு கதகளி போன்றவற்றின் தாக்கத்திலும் நம் பழ மரபுக் கதையான மகாபாரதத்தை நவின உலக அரங்காக முன் வைத்தார் பீற்றர் புரூக்13.
13.
கூத்து மீளுருவாக்கம்-13

மீளுருவாக்கம் பெற்ற சேக்ஸ்பியர் நாடகங்கள்

சேக்ஸ்பியர் ஆங்கில நாடக மரபில் பிரித்தானிய மக்களின் தொன்மை நினைவுகளை மீட்டெடுத்து பிரித்தானியாவுக்கான சென்னெறி அரங்கை கட்டமைத்தவர் உலக நாடகர்களின் கனவுப் படைப்பாளியாக இன்று வரை உலா வருபவர் .

கிட்டத்தட்ட நாற்பத்தியிரண்டு நாடகங்களை படைத்தவர் உலகப் புகழ் பெற்ற மகா நாடகன் சேக்ஸ்பியர்.உலக மொழிகள் பெரும்பாலவர்றில் அவர் நாடகங்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

அவரது குலோப் தியட்டர் கிரேக்க அரங்க கட்டிடக் கலையயை உள்வாங்கிக் கொண்டு உள்ளக அரங்காக வடிவமைக்கப் பட்ட அரங்க வெளி.

நவின அரங்கவியலாளர்கள் சேக்ஸ்பியர் நாடகங்களை தங்கள் கற்பனைகளுக்கு இடம் தந்து மீளுருவாக்கம் செய்துள்ளனர்.குறிப்பாக செக்னர் சேக்ஸ்பியரின் மக்பத்,ஹம்லட் ஆகிய நாடகங்களை புதிய படைப்பாக்கமாக அரங்கில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார்.

பீற்றர் புரூக் சேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு புதிய காட்சி வடிவங்களை மேடையில் கொணர்ந்தார்.அவரது மக்பத்,ஹம்லட் ஆகிய படைப்புகள் ஆங்கில நாடக உலகில் புதிய தரிசனங்களாய் அமைந்தன.
14.
கூத்து மீளுருவாக்கம்-14

மேலைத் தேய நவீன அரங்க மீளுருவாக்கமும் மீ லாங்பாங்கும்

நவீன மேலைத்தேய அரங்கு மூடிய கோட்பாடுகளுக்குள் தன்னை அகவயப் படுத்திக் கொண்டு இயங்கிய காலத்தில் 1930 களில் சீன பீக்கிங் ஒபேராவின் தலை சிறந்த கலைஞர் மீ லாங்பாங்கின் காலாசார சுற்றுப் பயணம் மேலைத் தேய நவீன அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்களது வாய்ப்பாட்டு தன்மையான அரங்கக் கோட்பாடுகளில் புதிய சிந்தனைகளுக்கு களம் அமைத்தது எனலாம்.

அமரிக்க ஐரோப்பிய பயணம் அரங்க வெளியில் ஆசிய அரங்குகளுக்கும் அவற்றின் அழகியலுக்கும் தனி மதிப்பை உருவாக்கியதோடு அரங்க மீளுருவாக்க செயல் பாடுகளில் புதிய நாடக அளிக்கைகளுக்கு வழி சமைத்தது.

புதிய வடிவிலான மீளுருவாக்க நவீன அரங்குகள் முன்னய நாடகங்களுக்கு புது தோற்றத்தை வெளிப்படுத்தின

பெற்றோல் பிரக்ட் போன்றவர்கள் அரங்கில் புதிய கோட்பாடுகளை உருவாக்கவும் நடிப்பு நடிகன் என்ற பின் புலத்தில் புதிய அர்த்தங்களை மே லாங்பாங் ஏற்படுத்தியமை இங்கு குறிப்பிடத் தக்கது .15.
கூத்து மீளுருவாக்கம்-15

ஆசிய மரபு வழி அரங்குகளும் அவற்றின் மீளுருவாக்கமும்

ஆசிய அரங்க வகைகள் பல நூறு வகைப் பட்ட பல்லாயிரம் வருச கலாசாரப் பாரம்பரியங்கள் கொண்டது ஆசியக் கண்டம்.இந்தியா ,சீனா, இரண்டு பெரும் உப கண்ட நாடூகளும் அவற்றை சூழ பல சிறிய நாடுகளும் காணப் படுகின்றன

யப்பான்,இந்தோனிசியா,கம்போடியா,தாய்லாந்து,இலங்கை,பங்களாதேஸ்,பிலிப்சின்ஸ்,பாகிஸ்தான்,நேபாளம் ,பர்மா ,தென் கொரியா ,வட கொரியா ,வியட்னாம் என விரிந்திருக்கும் நாடுகள் இந்த நாடுகளில் இந்திய கலைப் பாரம்பரியம் சீன கலைப் பாரம்பரியம் என இரண்டு பெரும் கலாசார பாரம்பரியங்களின் தாக்கம் பல நாடுகளிலும் பரவியுள்ளது குறிப்பாக இந்திய பாரம்பரிய கதைகளும் அரங்க ஆடல் வடிவங்களும் இந்த நாடுகளில் பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இரண்டு பெரும் உலக யுத்தங்களும் மேலைத் தேய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளும் பெரும் பேரரசுகளின் அடாவடித் தனங்களும் பாரம்பரிய கலைகளை சிதைவுறுத்திய சூழ் நிலையில் நாடுகளில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியும் புதிய முற்போக்கு அரசியல் கொள்கைகளுடனானா அரசியல் புரட்சிகளும் புதிய கருத்துக்களுக்கும் த்கங்கள் பழமையயை மீட்டெடுக்கும் சிந்தனைகளுக்கும் வழி விட்டன .
பாரம்பரியங்களையும் கலைகளையும் தேடுகின்ற போது கிராமங்களில் மக்கள் வாழ்வோடு இணைந்திருந்த கலைகள் புதிய மீட்டெடுப்பில் புதிய பரிமாணங்களைப் பெற்றன.

யப்பானிய நோ,கபுகி

சீனாவின் ஒபேரா வடிவங்கள்

இந்தியாவில் ஒவ்வொரு மானிலங்களுக்கும் சொந்தமான பல அரங்க வடிவங்கள், கதகளி,யக்சகானா,யாத்ரா,அங்கிய நாட்,தமாசா,தெருக் கூத்து

நேபாளத்து மணி றிம்டு,

பர்மாவின் அனியன் பாவே,ஹவ்சா,நட்பாவே,

கம்போடியாவின் லாகன்கபா பொரன்,லாகொன் கோல்,

இந்தோஈனிசியாவின் அர்ஜா,பரோங்,கம்பா

கொரியாவின் கொகுடு காக்சி,பன்சோரி,

லாவோசின் மாவுலும்

மலேசியாவின் மாக்யொங்

பிலிப்பைன்சின் கொமடையா

சிங்கப்பூரில் இராமாயணம் சார்ந்த நடன வடிவம்

இலங்கையில் தமிழ் சிங்கள வடிவங்கள் தமிழின் கூத்து வகைகள் ,சிங்கள நாடகம போன்ற வடிவங்கள்

தாய்லாந்தின் கோன்,லகொன் பாய் னய்,லிகாய்

வியட்னாமின் சாய் லுஒங்,ஹட்பொயெ,ஹற்சியொ

பங்களாதேசின் யாத்ரா