.bmp)
களரி-மட்டக்களப்பில் கூத்து நடை பெறுவதற்காக விசேடமாக கட்டப்படும் அல்லது அமைக்கப்படும் இடம் களரி என அழைக்கப்படும்.கூத்து அரங்கேற்றத்திற்கு களரி கட்டுதல் ஒரு சடங்கு போலவே நடைபெறும்.களரியில் மூன்று பகுதிகள் முக்கியமானவை அடித்தளம்,இடைப்பகுதி,மேல்விதானம்.கீழ்பகுதி வட்ட வடிவமான மேலுயர்த்தப்பட்ட தளம்.இது இரண்டடி அல்லது ஒன்றரை அடி உயரமுள்ளதாக அமைக்கப்படும்.பச்சை தென்னோலைக் கிடுகுகளினால் சுற்றிகட்டப்பட்டு அதர்குள் மண் போட்டு உயர்த்தப்படும்.