Monday 17 November 2008

புதிய சாதனை



பரத நாட்டிய அரங்கேற்றம் ஒரு பார்வை! அண்மைக் காலங்களில் நிகழ்ந்த அரங்கேற்றங்களை பார்க்கையில் பரதநாட்டியம் தற்போது நோர்வேயில் ஒரு நல்ல ஆரோக்கியமான பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றே தோன்றுகிறது. அந்தவகையில் செல்வி ராகவி ரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றமும் 15.11.2008 ல் Grorud samfunnhus மண்டபத்தில் சிறப்பாகவே நடந்தது.
நடன ஆசிரியை திருமதி மேசி சூசை அவர்கள் இந்த அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். எட்டு வயதே நிரம்பிய செல்வி ராகவியால் திருமதி மேசி சூசை பெருமை பெற்றாரா அல்லது திருமதி மேசி சூசை அவர்களால் செல்வி ராகவி பெருமை பெற்றாரா என்று தோன்றக்கூடிய வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. எட்டு வயதில் ஒரு பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்ததை நோர்வேயில் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
பொதுவாக ஒரு மாணவி அரங்கேற்றம் செய்ய குறைந்தது நான்கு வருடங்களுக்குமேல் தேவை என்கிற நிலையில் செல்வி ராகவி எட்டு வயதில் அரங்கேற்றம் செய்கிறார் என்றால் அவர் எத்தனை வயதில் நாட்டியம் பயில தொடங்கியிருக்க வேண்டும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வந்திருந்த பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் ஒரு கருத்தை கூறியிருந்தார் hழத்துக் கலையென்று நாங்கள் எதை வெளியில் கொண்டு போகப்போகிறோம் வேறு இனத்தவற்கு எங்கள் நடனம் என்று எதை அடையாளப்படுத்தப் போகிறோம். நல்ல கேள்வி இதற்கான பதிலை இந்த நிகழ்ச்சியிலேயே திருமதி மேசி சூசை அவர்கள் தந்திருக்கிறார் அதற்கு பின்பு வருகிறேன்
இந்த அரங்கேற்றத்திலே செல்வி ராகவி முறையே புஸ்ப்பாஞ்சலி, ஐதீஸ்வரம், சப்தம, வர்ணம, பதம், கீர்த்தனை, தில்லானா, கூத்து (கூத்தையும் ஒரு உருப்படியாக சேர்த்த துணிச்சலுக்கு எமது பாராட்டுக்கள்) என எட்டு உருப்படிகளை ஆடிக்காட்டினார் இதில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.
வர்ணம் - மிக அருமையாக வடிவமைக்கப்பட்ட நடனம் நன்கு அறிந்த பாடல். வர்ணம் பொதுவாக பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் ஆனால் அதற்கு மாறாக ரசிக்க வைத்தது வர்ணத்திலே நவரச பதவர்ன கதைகளையும் தனது நடனத்தால் அழகாக விழங்கப்படுத்தினார் செல்வி ராகவி பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கோபமான அம்மன் சாந்தமாகும் அம்மன் என பிரமாதப் படுத்தினார் குறை - இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது
பதம் - தாயே ஐசோதா ... மிக அழகாக அபினயம் பிடித்தார் செல்வி ராகவி நடனம் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது தில்லானா- நல்ல அழகான நடனம் பொதுவாகவே தில்லானா ரசிக்கக்கூடிய நடனம் செல்வி ராகவியும் அனுபவித்து பார்க்கக்கூடியமாதிரி ஆடினார் கூத்து – பேராசிரியர் பாலசுகுமாரின் கேள்விக்கு திருமதி மேசி சூசை அவர்கள் பதில் சொன்ன இடம் மிக மிக அற்புதமாய் இருந்தது இந்த கூத்தை நிகழ்த்தியதன் முலம் திருமதி மேசி சூசை நடன ஆசிரியர்களுக்குள் தன்னை தனித்து அடையாளம் காட்டுகிறார் இளம் நடன ஆசிரியர்கள் கொஞ்சம் யோசிக்கலாம் கூத்தில் ஒரு புதிய யுக்தியை கையாண்டிருக்கிறார் திருமதி மேசி அவர்கள் பின்னணியில் வார்த்தைகளைத் தவிர்த்து தாளத்தில் நடர்ந்திருப்பதால் இங்கே கூத்து தனி நடனம் என்ற நிலைக்கு மாறிவிடுகிறது அத்துடன் நடன அசைவுகளும் வழமையான கூத்துவடிவத்திலிருந்து மாறுபட்டு தனி வடிவம் பெற்றுவிடுகிறது உலகிலேயே கூத்தை பரதநாட்டிய உருப்படிகளில் ஒன்றாக உருவகப்படுத்திய பெருமை திருமதி மேசி சூசை அவர்களையே சாரும்
வழமையாக கூத்தில் வரும் பாத்திரங்களை அதீத ஒப்பனையால் கோமாளிகள் போன்று தோற்றம் பெறச் செய்துவிடுவார்கள் அதற்கு மாறாக இங்கே அதிகம் உறுத்தாத ஒப்பனை இயல்பாக பார்வையாளர்களை கூத்துடன் ஒன்றிக்க வைத்துவிடுகிறது பார்வையாளர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பே அதற்கு சாட்சி ஓப்பனைக் கலைஞர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும் மிக நேர்த்தியாக இருந்தது ஆடைகளும் முக அலங்காரமும்
மேடையமைப்பு மிக மோசம் வெறுமையாக இருந்தது ஒரு பாரம்பரிய நடனத்துக்கு ஏற்ப சிறிய அளவிலாவது ஏதும் செய்திருக்கலாம் அல்லது இப்பிடி மாலைகளைக் கட்டி அலங்கோலப் படுத்தாமலாவது இருந்திருக்கலாம் பொதுவாகவே வேறு விடயங்களுக்கு காசை இறைப்பவர்கள் மேடையமைப்புக்கு பின் நிற்பது ஏன்? அல்லது வேறு சில நிகழ்ச்சிகளில் பார்த்தது போல வேறு நாடுகளிலிருந்து அலங்காரப் பொருட்ளை இறக்கி (மஞ்சள் நிறத்தில்கூட என்ன ரசனையோ) அசிங்கமாய் ஒரு செற் போடுவார்கள் ஏன் இங்கிருக்கும் கலைஞர்கள் கண்களில் தெரிவதே இல்லை அதே காசை இங்கேயே பாவிக்கலாமே அதே போல இந்தியக் கலைஞர்களையே தொடர்ந்தும் பாவிக்கிறோமே எப்போது எமது கலைஞர்கள் கண்களில் தெரியப் போகிறார்கள் ஒலியமைப்பு நன்றாக இருந்தது
நன்றிஸ்ரிபன்
ntpicture ன் ஒரு வாசகர் ஒரு கேள்வி அனுப்பியிருந்தார் ஏன் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி உங்கள் இணையத்தில் எதுவும் எழுதவில்லையென்று அதற்கான பதில்- தனி நபர்கள் தனி அமைப்புக்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு எமக்கு அழைப்பு அல்லது அறிவித்தல் கிடைத்தால் மட்டுமே நாங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போய் அது பற்றிய எமது கருத்தை எழுதுவோம் இது எமக்கு ஏற்படும் வசதிக்குறைவை தவிர்ப்பதற்காக நாம் எடுத்த ஒரு முட

No comments: